இன்றைக்கு தமிழகத்திலே மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயம் நமது 'ஆன்மிக அண்ணா' நித்யானந்தாவின் லீலைகள். அவர் நல்லது செய்த பொழுது கூட அதில் அதிக ஆர்வம் காட்டாத நமது தமிழ் மறவர்கள் கூட்டம் இதற்க்கு அப்புறம் அவரை பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் கொண்டது.'கதவை திற , காற்று வரும்' என்று சொல்லிய அவருக்கு 'கதவை திறக்காமலே (தன்) ஆட்டம் வெளியே வரும்' என்று தெரியாமல் போயிற்று.இதுவரை நாடோடி தென்றல் நடித்த படங்களை காணாது அவரை 'மார்கெட்டில்' இருந்து துரத்திய அணைத்து தமிழர்களும் இந்த படத்தை காண விழைந்தனர். நமது நண்பர்கள் மற்றும் தொண்டர்கள் திரு. பச்சை இராசனந்தரும் மற்றும் பச்சை ராமானுஜானந்தரும் கேட்டு கொண்டதற்கு இணங்க அந்த காட்சியினை காண வேண்டியதாயிற்று. (நமது பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள் : இந்த படத்தின் முழு பதிவு பஜாரில் கிடைப்பதாக கேள்வி. அதை தவயு கூர்ந்து ஆசிரமத்துக்கு விரைவு தபாலில் அனுப்பவும். நமது சிஷ்யர்களுக்காக இந்த வேண்டுகோள்.) இந்த காட்சியை கண்டதும் நமக்குள்ளே பல கேள்விகள்.
இருவரும் இசைந்து செய்த ஒரு காரியம் தவறா?
சுவாமி சிவாஜி படத்தை பார்த்து கொண்டிருந்தாரா?
சுவாமிக்கு நடக்கும் காரியங்களில் ஈடுபாடு கொள்ளாததின் காரணம் என்ன?
இவர் படுத்த இடத்தை விட்டு எழாமல் எல்லா காரியங்களையும் ரஞ்சிதாவை விட்டு செய்ய சொன்ன காரணம் என்ன?
இவரே ஒரு சோம்பேறி போலிருக்கிறார் , இவரிடம் யோகா கற்று பயனடைந்தவர்கள் யார்?
ஒரு சேலை வாங்கும்போதே புரட்டி புரட்டி பார்க்கும் நம் கூட்டம் இவர் பின்னே ஏன் சென்றார்கள்?
நமது குழந்தைகளை பார்க்கும் போதும் அவர்களிடம் பேசும் போதும் வராத மன நிம்மதி இவரிடம் சென்றால் வந்ததா?
நமது வீட்டு பெரியவர்களை மதியாத இந்த முட்டாள் கூட்டம் இவரை மதிப்பத்தின் காரணம் என்ன?
கடவுளை சென்றடையாமல் இந்த புரோக்கர்களை நம்புவது ஏன்?
இவர் தன்னிடம் வந்த எண்ணிலடங்கா செல்வத்தை பணத்தை நல்ல வழிக்கு பயன் படுத்தினாரா? அப்படி அவர் செய்து இருந்தால் இந்த செயலை மன்னிக்க வேண்டியது தானே?
படித்தவர்கள் நிறைய பேர் இவரிடம் செல்கிறார்களே? அது ஏன்? கல்வி இவர்களுக்கு பகுத்தறிவை அளிக்கவில்லையா? அப்படி என்றால் அந்த கல்வியால் என்ன பிரயோசனம்?
மலையாள திரைப்பட போஸ்டர்களை அடித்தால் வம்பு செய்யும் மகளீர் சங்கங்கள் , வீடு வரவேர்ப்பரைக்கு எடுத்து சென்று இதை ஆறில் இருந்து அறுபது வரை காண செய்த சன் டிவியை ஏன் கேள்வி கேட்கவில்லை ? அரசாங்கம் என்ன செய்தது?
பல பதவிகளில் இருக்கும் அந்த குடும்பத்தினர் யோக்கியமா?
உன் மனதின் நிம்மதி உன்னிடத்தில் தான் உள்ளது. தான் பெற்றதில் நிம்மதியை தேடாமல் இல்லாததை தேடி அலையும் கூட்டம் இருக்கும் வரை இது போல போலி மனிதர்களை ஒழிக்க முடியாது.
நமது கலாச்சாரத்தின் முக்கிய அம்சமான கூட்டு குடும்ப முறையை விட்டோழித்ததின் பலன்தான் இது. உன் நன்மையில் உன் குடும்பத்தாருக்கு இல்லாத அக்கறை இவனுக்கு இருக்குமா? பெற்றவர்களுக்கு சோறு போடாமல் இவனுக்கு பால் அபிஷேகம் செய்வதன் காரணம் என்ன? அவன் கேட்டானோ இல்லையோ நீ கொண்டு கொட்டிக் குடுத்துவிட்டு இன்றைக்கு அவனை திட்டுவதில் நியாயம் இல்லை.
முதலில் உன் பெற்றோர் ,உற்றோர் குழந்தைகள் நண்பர்கள் இவர்களிடம் ஆலோசனைக்கு செல். இவர்களை மதி. உன் மன கதவு திறக்கும் காற்றும் வரும்.நிம்மதியும் வரும்