Sunday, March 21, 2010

சக தொழிலாளி நித்தியானந்தா தவறு செய்தாரா ?

இன்றைக்கு தமிழகத்திலே மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயம் நமது 'ஆன்மிக அண்ணா' நித்யானந்தாவின் லீலைகள். அவர் நல்லது செய்த பொழுது கூட அதில் அதிக ஆர்வம் காட்டாத நமது தமிழ் மறவர்கள் கூட்டம் இதற்க்கு அப்புறம் அவரை பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் கொண்டது.'கதவை திற , காற்று வரும்' என்று சொல்லிய அவருக்கு 'கதவை திறக்காமலே (தன்) ஆட்டம் வெளியே வரும்' என்று தெரியாமல் போயிற்று.இதுவரை நாடோடி தென்றல் நடித்த படங்களை காணாது அவரை 'மார்கெட்டில்' இருந்து துரத்திய அணைத்து தமிழர்களும் இந்த படத்தை காண விழைந்தனர். நமது நண்பர்கள் மற்றும் தொண்டர்கள் திரு. பச்சை இராசனந்தரும் மற்றும் பச்சை ராமானுஜானந்தரும் கேட்டு கொண்டதற்கு இணங்க அந்த காட்சியினை காண வேண்டியதாயிற்று. (நமது பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள் : இந்த படத்தின் முழு பதிவு பஜாரில் கிடைப்பதாக கேள்வி. அதை தவயு கூர்ந்து ஆசிரமத்துக்கு விரைவு தபாலில் அனுப்பவும். நமது சிஷ்யர்களுக்காக இந்த வேண்டுகோள்.) இந்த காட்சியை கண்டதும் நமக்குள்ளே பல கேள்விகள்.

இருவரும் இசைந்து செய்த ஒரு காரியம் தவறா?
சுவாமி சிவாஜி படத்தை பார்த்து கொண்டிருந்தாரா?
சுவாமிக்கு நடக்கும் காரியங்களில் ஈடுபாடு கொள்ளாததின் காரணம் என்ன?
இவர் படுத்த இடத்தை விட்டு எழாமல் எல்லா காரியங்களையும் ரஞ்சிதாவை விட்டு செய்ய சொன்ன காரணம் என்ன?
இவரே ஒரு சோம்பேறி போலிருக்கிறார் , இவரிடம் யோகா கற்று பயனடைந்தவர்கள் யார்?
ஒரு சேலை வாங்கும்போதே புரட்டி புரட்டி பார்க்கும் நம் கூட்டம் இவர் பின்னே ஏன் சென்றார்கள்?
நமது குழந்தைகளை பார்க்கும் போதும் அவர்களிடம் பேசும் போதும் வராத மன நிம்மதி இவரிடம் சென்றால் வந்ததா?
நமது வீட்டு பெரியவர்களை மதியாத இந்த முட்டாள் கூட்டம் இவரை மதிப்பத்தின் காரணம் என்ன?
கடவுளை சென்றடையாமல் இந்த புரோக்கர்களை நம்புவது ஏன்?
இவர் தன்னிடம் வந்த எண்ணிலடங்கா செல்வத்தை பணத்தை நல்ல வழிக்கு பயன் படுத்தினாரா? அப்படி அவர் செய்து இருந்தால் இந்த செயலை மன்னிக்க வேண்டியது தானே?
படித்தவர்கள் நிறைய பேர் இவரிடம் செல்கிறார்களே? அது ஏன்? கல்வி இவர்களுக்கு பகுத்தறிவை அளிக்கவில்லையா? அப்படி என்றால் அந்த கல்வியால் என்ன பிரயோசனம்?
மலையாள திரைப்பட போஸ்டர்களை அடித்தால் வம்பு செய்யும் மகளீர் சங்கங்கள் , வீடு வரவேர்ப்பரைக்கு எடுத்து சென்று இதை ஆறில் இருந்து அறுபது வரை காண செய்த சன் டிவியை ஏன் கேள்வி கேட்கவில்லை ? அரசாங்கம் என்ன செய்தது?
பல பதவிகளில் இருக்கும் அந்த குடும்பத்தினர் யோக்கியமா?

உன் மனதின் நிம்மதி உன்னிடத்தில் தான் உள்ளது. தான் பெற்றதில் நிம்மதியை தேடாமல் இல்லாததை தேடி அலையும் கூட்டம் இருக்கும் வரை இது போல போலி மனிதர்களை ஒழிக்க முடியாது.
நமது கலாச்சாரத்தின் முக்கிய அம்சமான கூட்டு குடும்ப முறையை விட்டோழித்ததின் பலன்தான் இது. உன் நன்மையில் உன் குடும்பத்தாருக்கு இல்லாத அக்கறை இவனுக்கு இருக்குமா? பெற்றவர்களுக்கு சோறு போடாமல் இவனுக்கு பால் அபிஷேகம் செய்வதன் காரணம் என்ன? அவன் கேட்டானோ இல்லையோ நீ கொண்டு கொட்டிக் குடுத்துவிட்டு இன்றைக்கு அவனை திட்டுவதில் நியாயம் இல்லை.

முதலில் உன் பெற்றோர் ,உற்றோர் குழந்தைகள் நண்பர்கள் இவர்களிடம் ஆலோசனைக்கு செல். இவர்களை மதி. உன் மன கதவு திறக்கும் காற்றும் வரும்.நிம்மதியும் வரும்

(கி)ராமராஜனின் போட்டியாளர் சாமியார் ஆன வரலாறு:

அந்த நாள் மயிலாடுதுறை சுற்று வட்டாரத்தில் இருந்த மாடுகளுக்கு ஒரு கருப்பு நாள். வளரவேண்டிய ஒரு மாடு மேய்ப்பன் (கௌபாய் ) கொல்லப்பட்ட ஒரு நாள். ஊரில் இருக்கும் அணைத்து சொந்தக்களும் பந்தங்களும் சுற்றி நின்று வரவை எதிர்பார்க்க பச்சானந்தா என்று அழைக்கப்பட்ட நமது ஹீரோவின் என்ட்ரி. சுற்றி இருந்த சொந்தங்கள் "கண்ணு பட போகுதையா சின்ன தம்பியே " என்று பாடி குலுவையிடஅந்த சின்ன தம்பியின் கண்களில் கண்ணீர். ஏன் இந்த கண்ணீர்? ஊரே திரண்டு விடை தேட " நான் பள்ளி கூடம் போலை நான் மாடு மேய்க்க போறேன் . என்னை விட்டுடுங்க என்னை விட்டுடுங்க " என்று நமது ஹீரோ அலற அலற "மயிலாடுதுறையின் ரோல்ல்ஸ் ராய்ஸ் " என்று அழைக்கப்பட்ட மாட்டு வண்டியில் ஏற்றப்பட்டார். வண்டி மாடோ நமது ரட்சகன் இனமான காவலன் இப்படி கொடுமை படுத்த படுகிறாரே என்று நடக்க மறுக்க நினைத்தாலும் மதியம் கிடைக்க போகும் வைக்கோலுக்கு சி கு எங்க ஆப்பு வைத்திவிடுவரோ என்ற பயத்தில் வெகு வேகமாக நடை போட்டது.
இவ்வாறாக அந்த பள்ளிக்கு வண்டி சென்றடைததும் நமது ஹீரோ துள்ளி குதித்து மீண்டும் தனது போராட்டத்தை தொடர்ந்தார். தான் கிருஷ்ணா அவதாரம் என்றும் தான் மாடு மேய்க்கத்தான் இந்த மண்ணில் பிறந்ததாகவும் கூறியும் ஒருவரும் அதை நம்பவில்லை.தனக்கு படிப்பு சொல்லி தருவதை விட வேறு ஒருவருக்கு சொல்லி தந்தால் அவர்களுக்கு பிரயோசனம் என்று தன் அறிவு கண்ணை திறந்து சொல்லிய போதும் ஒன்னாம் வகுப்பு அனு பாக்கியம் டீச்சரும் ஹெட் மாஸ்டர் நாராயண ராவ் சாரும் அவரை தர தர என்று இழுத்து சென்றனர். என்ன பாவமோ அன்றிலுருந்து இன்று வரை படிப்பே ஏறவில்லை.
ஆனால் இன்றோ சுவாமிக்கு கிருஷ்ணரை போல அலங்காரம் செய்து வழி படுகின்றனர் இந்த முட்டாள் மக்கள்கள். அன்று அவர் கூறியது போல செய்திருந்தால் இன்று பல பேர் பிழைத்து இருப்பார்கள்.

Monday, March 15, 2010

பச்சானந்தா வேலைக்கு சென்ற கதை

இந்த கதையானது சுவாமி பச்சானந்தாவின் சேவை மனதை பற்றிய ஒரு குறிப்பாகும். இந்த கதையை சுவாமியின் வாயால் கேட்ட பலரும் தங்களை மறந்த நிலையில் உலகுக்கு சேவை செய்ய புறப்பட்டது ஒரு தனி கதை. இது போல ஒரு தெய்விக அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டால் அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும். சுவாமியே சொல்கிறார் கேளுங்கள் :
அது ஒரு கனா காலம். ஒரு கவலையும் இல்லாமல் எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல் ஊர் சுற்றிய காலம். வீட்டில் உள்ள பாட்டிகளுக்கும் அத்தைகளுக்கும் மற்ற நமது பதினெட்டு பட்டி உறவினர்களுக்கும் சேவை செய்து வந்த காலம். இவர்கள் ஆஸ்பத்திரி மற்றும் கடைகளுக்கு செல்லும் போதும் ஒரு வெட்கமும் இல்லாமல் அவர்களுக்கு சுமை தூக்கியாக இருந்த நேரம். அவர்கள் கொடுக்கும் அஞ்சு மற்றும் பத்து ரூபாயில் அனைத்து ஆஸ்பத்திரியின் கேண்டீன்களிலும் சாப்பிட்டு உடம்பை வளர்த்த காலம். அனைத்து கேண்டீன் முதலாளிகளும் நமக்கு நண்பர்கள் ஆகினர். GG ஆஸ்பத்திரியில் கேண்டீன் வைத்திருந்த ஜிமிக்கி மாமிக்கு என் மீது மிகவும் பிரியம். "ஏன்டா அம்பி சும்மாதான இருக்க கொஞ்சம் இட்லி மாவு ஆட்டி தாயேன். நேத்திக்கு வடை கொஞ்சம் மீந்து போச்சு , நாய்க்கு தூக்கி போடலாம்னு இருந்தேன். உன் நியாபகம் வந்துச்சு இந்தா சாப்புடு " என்று உரிமையாக சொல்லும் அளவுக்கு ஒரு பிரியம். இது கொஞ்சம் ஓவரா போயி நம்ம பதினெட்டு பட்டியில யாருக்கு உடம்பு முடியாம போனாலும் எனக்கு சேதி சொல்ல ஆரம்பிட்சாங்க. ஒவ்வொரு ஆஸ்பத்திரிலையும் ஒரு செட் ஜட்டி பனியனை கொடுத்து வைக்கிற மாதிரி ஆகி போச்சு. இப்படி நோபல் பரிசுக்கு போற அளவுக்கு நம் சமூக சேவை நடந்தது. இந்த நேரத்துல ஒரு நாள் நம்ம நிலவு அக்கா மற்றும் பல உறவினர்களை அழைச்சுட்டு பர்மா பஜார் போக சொல்லி பாட்டி உத்திரவு. காலைல அழைச்சுட்டு போயி நைட்டு வரைக்கும் ஷாப்பிங். நான் கார்ல தேவுடு காத்தல். செலவுக்கு 20 ருபாய் கொடுத்துச்சு. நானும் அதுல நல்ல சாப்டேன். இரண்டு நாள் கழிச்சு நிலவு அக்கா வீட்டுக்கு போனால்(கூட்டு குடும்பம்) அங்க செலவு நோட்டுல பச்சானந்தா சாப்பாடு செலவு ருபாய் 50 அப்படின்னு போட்டு இருந்தது. பாத்தவுடன் எனக்கு தலை சுற்றியது. நிலவு அக்கா பண்ண முப்பது ருபாய் செலவை என் பெயர்ல எழுதி இருந்தது. இப்படியே போன நம்மளை ஒரு ரேஞ்சுக்கு கொண்டு போயிடுவங்கன்னு பயந்து வேலைக்கு போக ஆரம்பிதேன்

பச்சானந்தாவின் சிறு வயது லீலைகள் .

எங்கள் குடும்ப ராஜ குரு மற்றும் பல பேரின் வாழ்நாள் துன்பங்களுக்கு காரணமான து -- என்ற பா.சு ஐஎரை கண்டாலே எங்கள் குடும்பத்து ஆண்களுக்கு ஒரே கோபம். ஆத்திரம். ஏனென்றால் எதாவது பேசி அவர்கலுக்கு திருமணம் நடத்தி விடுவார். எனது மாமா ஒருவர் ஒவ்வொரு கல்யாணதில்லையும் குத்து கவுண்டர் போட்டு அதில் வரும் பணத்தில் அனாதை ஆசிரமத்திற்கு நன்கொடை அளிக்க முயன்றார். பலருக்கு இந்த ஐடியா பிடித்தாலும் பெரிசுகளின் அதட்டலால் அதை செய்ய முடியவில்லை. நல்ல சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். வந்தது ஒரு சந்தர்ப்பம்.திட்டம் தீட்டப்பட்டது. மலை முழுங்கி மகாதேவன் என்றும் "Drunken Monk" என்று பாராட்டப்பட்ட பா.சு விற்கு மணி கட்ட தீர்மானிக்கபட்டது. இடம் :சென்னை. நிகழ்ச்சி: ஹீரோவின் தாத்தாவிற்கு ஒரு ஹோமம். அதற்கு வந்தவர் பலர். அதில் ஒரு வினோத ஜோடி. கா மற்றும் த. இருவருமே பா.சு வை பதம் பார்க்க திட்டம் தீட்டினர். தங்களால் அதை செய்ய முடியாது என்றதால் அதை செய்து முடிக்க இளிச்ச வாயர்களை தேடினர். அவர்களுக்கு உடனே நினைவுக்கு வந்தது நமது நாயகன் மற்றும் அவரது முந்திரி கொட்டை மச்சான் "ம". இந்த இருவருமே அழைகபட்டனர். எதோ சாப்பிடதான் கூபிட்றான்களோ என்று நினைத்து அந்த இருவரும் சென்றனர். அப்போது பா.சு இவர்கள் இருவரையும் அழைத்து தாகமா இருக்கு ஒரு சோடா வாங்கிட்டு வாங்க, ஒரே தலை வலி என்றார். கா மற்றும் த ஜோடிக்கு பொறி தட்டியது. உடனே அவர்கள் பா.சு விடம் "அய்யா நாங்க சொல்றோம் என்று சொல்லி எங்களை அழைத்தனர் அய்யாவுக்கு போயி நல்ல சோடாவும் அப்படியே ஒரு சாரிடானும் வாங்கிட்டு வாங்க, அதோட அந்த சாரிடானை பொடி பண்ணி அந்த சோடாவில் கலந்து கொண்டாங்க என்று என்று சொல்ல இந்த சுந்தோப சுந்தரர்கள் கிளம்பினார்கள். சோடாவை வாங்கி விட்டு மருந்து கடைக்கு போய் ஆறு சாரிடான் வாங்கி நாடு ரோட்டில் உட்காந்து கல்லை எடுத்து பொடி செய்து சோடாவில் கலக்கி திரும்பவும் மூடி எடுத்து வந்து பா.சு விடம் கொடுப்பதுக்குள் ஞா சு குறுக்கே வந்து எனக்கு சோடா குடு என்று சொல்ல , இல்லை இல்லை இது பா.சு விற்கு ஸ்பெஷல் சோடா என்று சொல்லிவிட்டு பா.சு விடம் கொடுத்தனர். பா.சு வும் தம்பிங்களா உங்களுக்கு சீக்கிரமே கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்ல சுசு(சுந்தோப சுந்தரர்கள் ) குஷியாக இருந்தனர். கலக்கல் சோடாவை குடித்த பா.சு வின் உடல் குளிங்கியது. கண்கள் விஜயகாந்த் கண்கள் போல சிவந்தது. பிறகு தள்ளடியாபடியே வீட்டிற்குள் தொலை காட்சி பார்க்க சென்றார். அங்கு குருவாயூர் யானைகளை பற்றி ஒரு டாகுமெண்டரி டீவீயில் ஓடியது.அதை பாசு உற்று உற்று பார்த்த படியே சிரிக்க மக்களுக்கோ ஒரு அதிர்ச்சி.
திடீர் என்று "21 dogs 21 dogs " என்று பாசு சொன்னார். பார்த்த மற்றும் கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சி. அவர் யானை பார்த்துதான் நாய் என்றார் என்பதும் சுத்தி நின்ற 18 பட்டி மக்களுக்கும் புரிந்தது. நாங்கள் செய்த விஷமமும் தெரிந்தது. பிறகு அவர் கண்களில் தாரை தாரையா கண்ணீர் வழிய அப்போது எங்கிருந்தோ "கண்ணில் என்ன கார்காலம், கன்னங்களில் நீர் கோலம் " என்ற பாடல் ஒலித்தது.அவரை கை தாங்கலாக பிடித்து போய் படுக்க வைத்ததும் நாங்கள் இருவரும் திட்டு வாங்கியதும் கனவு போல இருக்கிறது.
இரவு முழுவதும் அவருக்கு உடம்பு தூக்கி தூக்கி போட்டதாகவும் , அந்த சத்தத்தை கேட்ட எழுத்த வீட்டு அண்ணி " யார் அது நைட்டுல உரலை இடிக்கிறது " என்று கேட்டதாகவும், அவர் உடம்பில் இருந்து ஆவி பிரிய இருந்ததாகவும் , இன்னொரு வாத்தியாரை பூஜைக்கு ஏற்பாடு செய்ததாகவும் ஒரு பேச்சு இன்னமும் இருக்கு.
ஆனால் எல்லோருக்கும் முன்னாடி பாசு எந்திரிச்சு பூஜைக்கு ரெடி செய்து கொண்டிருந்ததை பார்த்து அனைவரும் தலை சுற்றி சாய்ந்ததுதான் இந்த கதையின் ஹைலைட்டு.
சோடாவில் சாரிடான் கலந்தால் போதை வரும் என்று யாரோ சொல்லியதை டெஸ்ட் செய்து பார்க்க விரும்பிய கா & த குழுவினர் செய்த அலம்பல் இது.
பி.கு : இந்த formulavai திரு.த.. கம் patent செய்து பெரும் பணக்காரர் ஆகி விட்டதாக ஒரு செய்தி அடிபடுகிறது. நிசமா

Thursday, March 11, 2010

Swamiyin Skill

சுவாமி ஐந்து மொழிகலில் பிரசங்கமும் அணைத்து மொழிகளில் அசிங்கமும் செய்வார்.

Monday, March 8, 2010

சுவாமி பச்சையனந்தாவின் அருள் மொழிகள் (அ) பிதற்றல்கள்

உன்னை நம்பு. இந்த மண்ணை நம்பு. என்னை நம்பாதே.
சுவாமியின் விளக்கம் :
சிவ பெருமான் என்னை பரங்கி மலையில் சந்திட போது கூறிய வார்த்தைகள் இது . சிவ பெருமான் தனது பக்தர்களை பார்த்து என்ன சொல்கிறார் என்றால் : உன்னை நம்பு , உன் இறை பக்தியை நம்பு என்று கூறுகிறார். நான் குடியிருக்கும் பட்சையானந்தா ஆசிரமத்தை நம்பி நீ வர வேண்டும். வந்தால் என்னை காணலாம் என்று நம்பாதே. நான் உன்னை பட்சையானந்தா மூலம் காண்கிறேன் என்று சிவ பெருமான் என் மூலம் உங்களுக்கு கூறி கொள்ள விரும்பிகிறார். ஆகவே பக்த கோடிகளே அடிக்கடி ஆசிரமத்துக்கு வருகை புரிந்து இறைவனை என் மூலமாக காணுங்கள். இறைவன் என் மூலமாக உங்களை காண்பர்.
உண்மை :
மூடர்களே அடிக்கடி என் ஆசிரமத்துக்கு வந்து நுழைவு கட்டணம் $100 கட்டி பில் கேட்ஸ் லெவலுக்கு என்னை பணக்காரன் ஆக்குங்கள். .

சுவாமி பச்சையனந்தாவின் பூர்வாசிரமம்

சுவாமி பச்சையனந்தா தோன்றிய இடம் மயிலாடுதுறை . படித்து பிறகு வளர்ந்து இல்லறத்திலும் புகுந்ததும் அவ்வூரே. இல்லறம் கசந்து துறவறம் பெற்ற இடம் ஞான மோட்சம் அடைந்த இடம் சென்னை கயிலை என்று அழைக்கப்படும் பரங்கி மலை. அங்கு சிவ பெருமானையும் மன்மதனையும் ஒரு சேர கண்டு , அவர்களின் மூலம் தான் பெற்ற கற்ற அனுபவங்களை உலக மக்களுக்கு பகிர்ந்து அளிக்க வருகிறார். .