Sunday, March 21, 2010

(கி)ராமராஜனின் போட்டியாளர் சாமியார் ஆன வரலாறு:

அந்த நாள் மயிலாடுதுறை சுற்று வட்டாரத்தில் இருந்த மாடுகளுக்கு ஒரு கருப்பு நாள். வளரவேண்டிய ஒரு மாடு மேய்ப்பன் (கௌபாய் ) கொல்லப்பட்ட ஒரு நாள். ஊரில் இருக்கும் அணைத்து சொந்தக்களும் பந்தங்களும் சுற்றி நின்று வரவை எதிர்பார்க்க பச்சானந்தா என்று அழைக்கப்பட்ட நமது ஹீரோவின் என்ட்ரி. சுற்றி இருந்த சொந்தங்கள் "கண்ணு பட போகுதையா சின்ன தம்பியே " என்று பாடி குலுவையிடஅந்த சின்ன தம்பியின் கண்களில் கண்ணீர். ஏன் இந்த கண்ணீர்? ஊரே திரண்டு விடை தேட " நான் பள்ளி கூடம் போலை நான் மாடு மேய்க்க போறேன் . என்னை விட்டுடுங்க என்னை விட்டுடுங்க " என்று நமது ஹீரோ அலற அலற "மயிலாடுதுறையின் ரோல்ல்ஸ் ராய்ஸ் " என்று அழைக்கப்பட்ட மாட்டு வண்டியில் ஏற்றப்பட்டார். வண்டி மாடோ நமது ரட்சகன் இனமான காவலன் இப்படி கொடுமை படுத்த படுகிறாரே என்று நடக்க மறுக்க நினைத்தாலும் மதியம் கிடைக்க போகும் வைக்கோலுக்கு சி கு எங்க ஆப்பு வைத்திவிடுவரோ என்ற பயத்தில் வெகு வேகமாக நடை போட்டது.
இவ்வாறாக அந்த பள்ளிக்கு வண்டி சென்றடைததும் நமது ஹீரோ துள்ளி குதித்து மீண்டும் தனது போராட்டத்தை தொடர்ந்தார். தான் கிருஷ்ணா அவதாரம் என்றும் தான் மாடு மேய்க்கத்தான் இந்த மண்ணில் பிறந்ததாகவும் கூறியும் ஒருவரும் அதை நம்பவில்லை.தனக்கு படிப்பு சொல்லி தருவதை விட வேறு ஒருவருக்கு சொல்லி தந்தால் அவர்களுக்கு பிரயோசனம் என்று தன் அறிவு கண்ணை திறந்து சொல்லிய போதும் ஒன்னாம் வகுப்பு அனு பாக்கியம் டீச்சரும் ஹெட் மாஸ்டர் நாராயண ராவ் சாரும் அவரை தர தர என்று இழுத்து சென்றனர். என்ன பாவமோ அன்றிலுருந்து இன்று வரை படிப்பே ஏறவில்லை.
ஆனால் இன்றோ சுவாமிக்கு கிருஷ்ணரை போல அலங்காரம் செய்து வழி படுகின்றனர் இந்த முட்டாள் மக்கள்கள். அன்று அவர் கூறியது போல செய்திருந்தால் இன்று பல பேர் பிழைத்து இருப்பார்கள்.

2 comments:

  1. அம்புட்டு பேரு வேலையும் நீங்க ஒருத்தரேவா வாங்கிட்டீங்க?:))

    ReplyDelete
  2. வானம்பாடிகள் said...
    அம்புட்டு பேரு வேலையும் நீங்க ஒருத்தரேவா வாங்கிட்டீங்க?:))

    அப்படி இல்லை அய்யா. நான் பல இடங்களில் பணி செய்தேன் , செய்கிறேன், செய்வேன். என்னோடு பணி புரிந்தவர் பலர். நான் மாடு மேய்க்க சென்று இருந்தால் இவர்கள் பிழைத்து இருப்பார்கள் அல்லவா. அதைத்தான் அவ்வாறு கூறினேன்.

    ReplyDelete