Monday, March 15, 2010

பச்சானந்தா வேலைக்கு சென்ற கதை

இந்த கதையானது சுவாமி பச்சானந்தாவின் சேவை மனதை பற்றிய ஒரு குறிப்பாகும். இந்த கதையை சுவாமியின் வாயால் கேட்ட பலரும் தங்களை மறந்த நிலையில் உலகுக்கு சேவை செய்ய புறப்பட்டது ஒரு தனி கதை. இது போல ஒரு தெய்விக அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டால் அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும். சுவாமியே சொல்கிறார் கேளுங்கள் :
அது ஒரு கனா காலம். ஒரு கவலையும் இல்லாமல் எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல் ஊர் சுற்றிய காலம். வீட்டில் உள்ள பாட்டிகளுக்கும் அத்தைகளுக்கும் மற்ற நமது பதினெட்டு பட்டி உறவினர்களுக்கும் சேவை செய்து வந்த காலம். இவர்கள் ஆஸ்பத்திரி மற்றும் கடைகளுக்கு செல்லும் போதும் ஒரு வெட்கமும் இல்லாமல் அவர்களுக்கு சுமை தூக்கியாக இருந்த நேரம். அவர்கள் கொடுக்கும் அஞ்சு மற்றும் பத்து ரூபாயில் அனைத்து ஆஸ்பத்திரியின் கேண்டீன்களிலும் சாப்பிட்டு உடம்பை வளர்த்த காலம். அனைத்து கேண்டீன் முதலாளிகளும் நமக்கு நண்பர்கள் ஆகினர். GG ஆஸ்பத்திரியில் கேண்டீன் வைத்திருந்த ஜிமிக்கி மாமிக்கு என் மீது மிகவும் பிரியம். "ஏன்டா அம்பி சும்மாதான இருக்க கொஞ்சம் இட்லி மாவு ஆட்டி தாயேன். நேத்திக்கு வடை கொஞ்சம் மீந்து போச்சு , நாய்க்கு தூக்கி போடலாம்னு இருந்தேன். உன் நியாபகம் வந்துச்சு இந்தா சாப்புடு " என்று உரிமையாக சொல்லும் அளவுக்கு ஒரு பிரியம். இது கொஞ்சம் ஓவரா போயி நம்ம பதினெட்டு பட்டியில யாருக்கு உடம்பு முடியாம போனாலும் எனக்கு சேதி சொல்ல ஆரம்பிட்சாங்க. ஒவ்வொரு ஆஸ்பத்திரிலையும் ஒரு செட் ஜட்டி பனியனை கொடுத்து வைக்கிற மாதிரி ஆகி போச்சு. இப்படி நோபல் பரிசுக்கு போற அளவுக்கு நம் சமூக சேவை நடந்தது. இந்த நேரத்துல ஒரு நாள் நம்ம நிலவு அக்கா மற்றும் பல உறவினர்களை அழைச்சுட்டு பர்மா பஜார் போக சொல்லி பாட்டி உத்திரவு. காலைல அழைச்சுட்டு போயி நைட்டு வரைக்கும் ஷாப்பிங். நான் கார்ல தேவுடு காத்தல். செலவுக்கு 20 ருபாய் கொடுத்துச்சு. நானும் அதுல நல்ல சாப்டேன். இரண்டு நாள் கழிச்சு நிலவு அக்கா வீட்டுக்கு போனால்(கூட்டு குடும்பம்) அங்க செலவு நோட்டுல பச்சானந்தா சாப்பாடு செலவு ருபாய் 50 அப்படின்னு போட்டு இருந்தது. பாத்தவுடன் எனக்கு தலை சுற்றியது. நிலவு அக்கா பண்ண முப்பது ருபாய் செலவை என் பெயர்ல எழுதி இருந்தது. இப்படியே போன நம்மளை ஒரு ரேஞ்சுக்கு கொண்டு போயிடுவங்கன்னு பயந்து வேலைக்கு போக ஆரம்பிதேன்

No comments:

Post a Comment